இங்க 3 நாள் கூட ஓடாத பிரபுவின் படத்தை....ஹிந்தியில் ரீமேக் செய்து 100 கோடி லாபம் பார்த்த பிரபலம்!!

இங்க 3 நாள் கூட ஓடாத பிரபுவின் படத்தை....ஹிந்தியில்  ரீமேக் செய்து 100 கோடி லாபம் பார்த்த பிரபலம்!!

தமிழில் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களையும் இயக்கியவர் தான் நடிகர் டிபி கஜேந்திரன். இவர் இயக்கும் படங்களில் ஏதாவதுதொரு காட்சிகளில் கண்டிப்பாக தன்னை காண்பித்திருப்பார். அதேபோல் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியாக தான் அமைந்திருக்கும்.

அப்படி இவரின் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் தான் பந்தா பரமசிவம். இந்தப் படத்தில் பிரபல நடிகரான பிரபு, கலாபவன் மணி, அப்பாஸ், ரம்பா, மோனிகா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு முன்பே கஜேந்திரன், பிரபுவை வைத்து மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார். அந்த திரைப்படங்கள் முழுவதும் காமெடிகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த படங்களில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவை என்றே சொல்லலாம். அந்த வரிசையில் வெளியான இந்த பந்தா பரமசிவம் திரைப்படம் ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லையாம். இதனால் இந்தத் திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் கூட திரையரங்குகளில் சரியாக ஓடாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

இருப்பினும், இந்த திரைப்படம் ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் 2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அஸ்வின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.   வெறும் இரண்டே கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெளியாகி சுமார் 100 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஏற்கனவே மலையாளத்தில் மேட்டுப்பட்டி மச்சான் என்ற பெயரில் வெளியான இந்தப் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்திருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்தப்படம் தமிழில் படுதோல்வியை தலுவியது. 

தமிழில் பிரபுவின் கேரியருக்கே இந்த திரைப்படம் படுதோல்வியாக அமைந்ததால், அதற்கு பிறகு அவர் ஹீரோவாக நடிக்காமல் குணச்சித்திர கேரக்டரில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.