கோலாகலமாக தொடங்கிய பூரம் திருவிழா...!

கோலாகலமாக தொடங்கிய பூரம் திருவிழா...!
Published on
Updated on
1 min read

கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 

திருச்சூர் வடக்குநாதர் கோயில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பூரம் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில் கோயிலின் முன் பகுதியில், ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் தொடங்கி சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. 2 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம், திருவம்பாடி கிருஷ்ணர் கோயிலில் இருந்து தொடங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோயிலில் முடிவடைந்த நிலையில் முத்து மணி குடை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த இந்த திருவிழாவில் யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக கேரளா, தமிழ்நாடு மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். இதற்காக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com