திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ்...! ரசிகர்களின் கேள்விக்கு குழுவினர் அளிக்கபோகும் பதில் என்ன...?

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ்...! ரசிகர்களின் கேள்விக்கு குழுவினர் அளிக்கபோகும் பதில் என்ன...?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ந்து 5 சீசன் வரை வெற்றிகரமாக சென்றது. ஆனால்  ஒவ்வொரு முறையும் கடைசியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும், ஆரவாரமும் மக்களிடையே இருந்து வந்தது.

இப்படி 100 நாள் என்ற கணக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறிய மாற்றமாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்புடன் பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சி அறிவித்தனர்.

அதன்படி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை 5 சிசன்களிலும் பங்குகேற்று சிறப்பாக விளையாடி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டவர்கள் பலரும் தற்போது பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் 24 மணி நேரமும் லைவ் ஸ்ட்ரீமிங் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி ஒருநாள் கழித்தே ஒளிபரப்பாகி வரும் நிலையில், கடந்த சில மணி நேரங்களாக திடீரென நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படி திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டதற்கு, ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா? அல்லது பிக்பாஸ் வீட்டில் ஏதாவது சண்டை சச்சரவு நடந்து அதன் காரணமாக நிறுத்தப்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சில மணி நேரமாக நிறுத்தப்பட்டதையடுத்து,  சற்றுமுன்னர் பிக்பாஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புரோமோ வீடியோ வெளியானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ’புரோமோ விடியோ இருக்கட்டும் பிக் பாஸ் லைவ் நிகழ்ச்சியை ஏன் நிறுத்தினீர்கள்? என கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்தாலும் பல மணி நேரங்களாக ஏன் அது சரி செய்யவில்லை என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

மேலும், நாளை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள  நிலையில் இன்று திடீரென இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ரசிகர்கள் எழுப்பும் கேள்விக்கு எல்லாம் பிக்பாஸ் அல்டிமேட் குழுவினர் என்ன விளக்கம் தரப்  போகிறார்கள் என்பதை  பார்ப்போம்.