ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி.!!!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க நடிகர் விஜய்யை ஒற்றை வார்த்தையில் புகழ்ந்து பதிலளித்துள்ளார்.

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி.!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. 

அதற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் அமையாததால்,தெலுங்கு மற்றும் இந்தி வட்டாரங்களில் உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர். இந்நிலையில்,தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ’பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தின் மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை பூஜா. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் ,அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது,ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்... இனிமையானவர் என பதிலளித்துள்ளார்.