ப்பா செம்ம ஆட்டம்....நடுக்கடலில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பீஸ்ட் நாயகி.!!

ப்பா செம்ம ஆட்டம்....நடுக்கடலில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பீஸ்ட் நாயகி.!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்தநிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து, காதலர் தினமான பிப் -14 ஆம் தேதி  மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே, கப்பலில் பயணித்தப்படி அரபிக்குத்து பாடலுக்கு நடமாடிய வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.