என்னங்க சொல்றிங்க.. பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி இவங்களா? ஷாக்கில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்ள போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

என்னங்க சொல்றிங்க.. பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி இவங்களா? ஷாக்கில் ரசிகர்கள்!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தகட்டமாக தான் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி உருவானது. 

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் மட்டும்தான் ஒளிபரப்பபட்டது. ஆனால் அதற்கு மாறாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும்  HOTSTAR-ல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால், படங்களின் ஷூட்டிங் காரணமாக அவர் விலகியதால், கடந்த வாரம் முதல் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு வந்த நேரமாக இரண்டு வைல்ட் கார்டு என்ட்ரிகளாக கலக்க போவது யாரு சதீஷ் மாற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிம்பு வந்ததை முன்னிட்டு கடந்த வாரம் நோ எவிக்ஷன் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உண்டு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வாரம் நாமினேஷனில் அபிராமி, அனிதா, தாடி பாலாஜி, ஜுலி, சினேகன், சுருதி மற்றும் தாமரை ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் யார் வெளியேற போகிறது என்று பொறுத்திருந்து பாப்போம்.. ஏற்கனவே சிம்பு வந்ததன் ஸ்பெஷலாக இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஒரே நாளில் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வார இறுதியில் மற்றொரு வைல்ட் கார்டு என்ட்ரியாக பாப்புலர் போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப பட உள்ளாராம். அனைவரும் வைல்ட்கார்டு என்ட்ரியாக ஓவியா, ஷெரின், சாக்ஷி அகர்வால் ஆகியோர் வருவார்கள் என்று தான் நினைத்தார்கள்.

ஆனால், யாருமே எதிர்பாக்காத விதமாக நடிகை லாஸ்லியா, இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறாராம்..  பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

ஏற்கனவே லாஸ்லியா, கவின் காதல் விவகாரம் இவர்கள் கலந்து கொண்ட சீசனில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் லாஸ்லியாவின் என்ட்ரியால் புதிய காதல் காட்சிகள் அரங்கேறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.