விரைவில் சின்னத்திரை விருதுகள்...! தமிழ்நாடு அரசு...!!

விரைவில் சின்னத்திரை விருதுகள்...! தமிழ்நாடு அரசு...!!

2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்படும் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் அதில் பங்கேற்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை துறை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.சிறந்த நெடுந்தொடருக்கு முதல் பரிசாக 2 லட்சமும்,இரண்டாம் பரிசாக ஒரு லட்சமும், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது.

2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து ஆண்டுகளுக்கு 101 கலைஞர்களுக்கு கடந்த  2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் 2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில்  2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் அதில் பங்கேற்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை துறை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நெடுந்தொடருக்கு முதல் பரிசாக 2 லட்சமும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சமும், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது.