அசர்பைசான் பாராளுமன்றத்தில் முதல் முறையாக எடுக்கப்பட்ட - நடிகர் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு...

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் சர்தார். இப்படத்தின் முக்கியமான சில காட்சிகளுக்கு மட்டுமே 4 கோடி ரூபாய் வரை படக்குழுவினர் செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அசர்பைசான் பாராளுமன்றத்தில் முதல் முறையாக எடுக்கப்பட்ட - நடிகர் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு...

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் 'சர்தார்'. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருக்கிறார். மேலும், ராஷிகண்ணா, ரஜீஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

எஸ்.லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கார்த்தி நடித்த படங்களில் தற்போது எடுக்கப்பட்டு வரும் சர்தார் திரைப்படம் தான் தான் அதிக பொருட் செலவை கொண்டு உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைப்பெற்றது. இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதுவரை படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.