மூளையில் பிரச்சனை.. அர்ச்சனாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மூளையில் பிரச்சனை.. அர்ச்சனாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் மிக பிரபலமானவர் அர்ச்சனா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

என் மண்டை ஓட்டில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது. இன்று எனக்கு செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவுக்கான அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. 

மண்டை ஓட்டில் மூளைக்கு அருகில் சில விநோத வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. இந்த சவாலான அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவேன் என்பதை உறுதி அளிக்கிறேன். ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் உருக்கமுடன் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.