பிரமாண்டமாக உருவாகும் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு...!

பிரமாண்டமாக உருவாகும் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு...!

சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 'சூர்யா 42' படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை சிவா’ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.