அமிதாப் வாங்கிய குடியிருப்பில் சன்னிலியோன்.. !

 அமிதாப் வாங்கிய குடியிருப்பில் சன்னிலியோனும் ரூ.16 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 அமிதாப் வாங்கிய குடியிருப்பில் சன்னிலியோன்.. !

 மும்பையின் முக்கிய பகுதியில் தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு டூப்ளக்ஸ்.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் இங்கு வீடு வாங்க போட்டிபோட்ட நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில்,12வது மாடியில் உள்ள ஒரு வீட்டை கடந்த மார்ச் மாதமே பத்திரப் பதிவு செய்து நடிகை சன்னி லியோன் ரூ.16 கோடிக்கு  வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்நிலையில் தற்போது இதே அபார்ட்மென்டில் உள்ள 27 மற்றும் 28 ஆவது மாடியில் உள்ள மொத்த அப்பார்ட்மெண்டையும் பாலிவுட்டின் பிக் பி என அழைக்கப்படும்  அமிதாப்பச்சன் வாங்கியுள்ளாராம்.

5704 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் உள்பட பல வசதிகள் உள்ளது. இந்த வீட்டை அவர் ரூபாய் 31 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது மேலும் இதே அபார்ட்மெண்டில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயும்  ஒரு வீடு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.