டான்ஸ் ஆடிய படியே பார்டி பண்ணலாமா...? என ரசிகர்களிடம் கேட்ட சன்னிலியோன்!! குதுகலத்தில் ரசிகர்கள்

டான்ஸ் ஆடிய படியே பார்டி பண்ணலாமா...? என ரசிகர்களிடம் கேட்ட சன்னிலியோன்!! குதுகலத்தில் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம்வரும் நடிகை சன்னிலியோனுக்கு இந்தியா முழுக்கவே ரசிகர் பட்டாளம் அதிகரித்து காணப்படுகிறது. ஆரம்பத்தில் கிளாமர் வேடங்களுக்காக மட்டுமே  அறியப்பட்ட இவர் தற்போது கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களில் வரிசைக்கட்டி பிசியாக நடித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல்  சினிமாவைத் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

 

இப்படி சினிமாத்துறையில் பிஸியாக வலம் வரும் இவர், அவ்வப்போது  சோஷியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வரும்  நடிகை சன்னிலியோனை அங்கும் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடரும் ஃபாலோயர்கள் தற்போது 50 மில்லியனாக அதிகரித்துள்ளனர்.

இதுவரை பாலிவுட் சினிமாவில்  நடிகை தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், ஜாக்குலின் பெர்ணான்டஸ், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு 50 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னிலியோனை பின்தொடரும் ஃபாலோயர்கள் 50 மில்லியனைத் தாண்டியிருப்பது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கு மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து மகிழ்ச்சியில் தத்தளித்த நடிகை சன்னிலியோன் குதூகலமாக டான்ஸ் ஆடிய படியே பார்டி பண்ணலாமா? எனத் தனது ரசிகர்களிடம் கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குதுகலத்தில் உள்ளனர்.

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)