ரஜினி நெல்சன் காம்போவில் “ஜெய்லர்” - படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது சன் பிக்சர்ஸ்!! ரசிகர்கள் கொண்டாட்டம்...

தலைவர் 169 ந் புதிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிடுக்கின்றனர் படக்குழுவினர்.

ரஜினி நெல்சன் காம்போவில் “ஜெய்லர்” - படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது சன் பிக்சர்ஸ்!! ரசிகர்கள் கொண்டாட்டம்...

ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் அடுத்ததாக நடிகர் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. 

அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தலைவர் 169 படம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது தொடர்ந்தும் இப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் இடையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் அத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் டைட்டிலோடு சேர்ந்து படக்குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.