“ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4...ஒரே வாரத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை...!

அமெரிக்க வெப் சீரீஸ் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன்-4 வெளியான ஒரே வாரத்தில் 100 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை ஈர்த்து தென்கொரியாவின் சீரிஸ் “ஸ்க்விக் கேம்”-ன் சாதனையை முறியடித்துள்ளது. 

 “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4...ஒரே வாரத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை...!

அறிவியல் புனைவு-ஹாரர் டிராமா ஜானரில் உருவாகி இருக்கும் இந்த சீரிஸானது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் வரலாற்றிலேயே இதுவரை வெளியான ஒரே வாரத்தில் அதிகம் நபர்களை கவர்ந்த வெப் சீரிஸ் என்கிற சாதனையை படைத்திருக்கிறது. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் சீரிஸாக இந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் உள்ளது. இதில் குழந்தைகள் சம்மந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இது குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு கதைக்களம் ஆகும்.

ஒரே பள்ளியில் பயிலும் நான்கு நண்பர்களின் கதையே இது. வில், டஸ்டின் ஹெண்டர்சன், லூக்கஸ் மற்றும் மைக் ஆகிய நால்வரும் இணைந்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு கேம் விளையாடி வருவார்கள். அவ்வப்போது ஏற்படும் விஞ்ஞான தவறு ஒன்றின் காரணமாக வேற்று கிரகவாசிகள் உலகத்தின் கதவை திறந்து வில் பையர்ஸ்-ஐ ஏலியன்கள் தூக்கி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இதன் பின்னதாக வில் மீண்டும் பூமிக்கு எப்படி திரும்பி வருகிறார் அவரை கண்டு பிடிப்பதற்கான சில ஹாரர் காட்சிகளும் தான் முதல் சீசனின் கதை. இதனை தொடர்ந்து தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களிலும் அறிவியல் சார்ந்த அமானுஷ்யங்களை மையப்படுத்தி விறுவிறுப்பான காட்சிகளை வைத்து, அடுத்து என்ன அடுத்து என்ன என பார்ப்போரை ஒரு வியப்பிலேயே ஆழ்த்தி கொண்டு செல்லும்.

2016 -ல் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் முதல் சீசன் வெளியானது. 2017 ல் இரண்டாவது சீசனும் வெளியானது.2019 ல் மூன்றாவது சீசன் வெளியானது, இந்த மூன்று சீசன்களையும் பார்த்த குழந்தைகள் இத்தொடருக்கு அடிமையாகி நான்காவது சீசன் எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இருப்பினும் அமெரிக்காவின் சில பிரச்சனைகள் காரணமாக சீசன்-4 வெளியாக தள்ளிக்கொண்டே போனதால் பலரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். இரண்டு வருடங்களுக்கு பின்னதாக இந்த ஆண்டு ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் சீசன் -4 வெளியாகி மக்களை உற்சாகப்படுத்தி வருகிறது.