நடிகர் விஜய்சேதுபதி மீது கதை திருட்டு புகார்...!

நடிகர் விஜய்சேதுபதி மீது  கதை திருட்டு புகார்...!

விஜய்சேதுபதி, மோகன்ராஜா, விவேக், மகிழ்திருமேனி மேகா ஆகாஷ், ஆகியோர் நடிப்பில் மே 19-ம் தேதியன்று வெளியானது யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களின் வலியை எடுத்துரைக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  தற்போது, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்துதான் திருடப்பட்டது என குரல் கொடுத்துள்ளார் எழுத்தாளர் ஒருவர். ஈழ எழுத்தாளரான தொ.பத்திநாதன் என்பவர் இலங்கையில் நடந்து வந்த போர்க்குற்றங்கள் குறித்தும், நிலம் கேட்டு போராடி உயிர் நீத்த போராளிகள் குறித்தும் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். இவர், அந்தரம், தொப்புள்கொடி, போரின் மறுப்பக்கம், தமிழகத்தின் ஈழ அகதிகள், தகிப்பின் வாழ்வு ஆகிய புத்தகங்களை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறிருக்க, தற்போது தொ.பத்திநாதனின் புத்தகங்களில் இருந்தே நான்கைந்து சிறுகதைகளை தனித்தனியே பிரித்து அதனை ஒரே கதையில் புகுத்தி ' யாதும் ஊரே யாவரும் கேளிர் '  படத்தினை உருவாக்கியிருப்பதாக புகார்கள் குண்டு மழையாய் பொழியத் தொடங்கியுள்ளது. 

ஈழத்தமிழர்களின் வலிகளை நேரில் பார்த்து எழுதிய எழுத்தாளர்களின் உழைப்பை இயக்குநர்கள் சுரண்டுவது ஏன்?,... திருட்டுக் கதையை தூக்கிக் கொண்டு கோலிவுட் சந்தையில் விற்க வேண்டும் என்ற அவசியம் என்ன ? என்பதே எழுத்தாளர்களின் குமுறலாக உள்ளது.         

இதையும் படிக்க     |  8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா!           

இதையடுத்து,  மணிரத்னம், வெற்றி மாறன் போன்ற பெரிய இயக்குநர்களே நாவலைப் படமாக்கும் போது எழுத்தாளர்களுக்கு நன்றி தெரிவித்து, சட்டப்படி கதையை பயன்படுத்தி வரும் நிலையில் அறிமுக இயக்குநர்கள், அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கு வெட்கமாக இல்லையா? எனவும்  ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படிக்க     |  அடுத்த மாதம் தொடங்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு...!!!