உடம்பில் பிடித்த பாகம் எது? என கேட்ட ரசிகர்...ஓப்பனாக பதலளித்த ஸ்ருதிஹாசன்!!

உடம்பில் பிடித்த பாகம் எது? என கேட்ட ரசிகர்...ஓப்பனாக  பதலளித்த ஸ்ருதிஹாசன்!!
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். இவருக்கு  இசையில் அதிக ஆர்வம் இருந்தாலும் கூட நாயகியாகவே தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இதற்கிடையில் இசையில் ஆர்வம் காட்டி வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தன்னை பாடகியாகவும் நிலைநிறுத்தி கொண்டார். இவரது  நடிப்பில் கடைசியாக லாபம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்த ஸ்ருதி, அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு உடம்பில் பிடித்த பாகம் எது என கேட்ட போது அதற்கு ஸ்ருதிஹாசன் எனக்கு  இதயம், மூளை, கீழ் முழங்கால் தான் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் என ரசிகர்களின் பல கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com