சமந்தாவின் விவாகரத்தை பின்தொடர்ந்த சூப்பர் ஸ்டார் சீரஞ்வியின் மகள்!! இரண்டாவது முறையாக விவாகரத்தா...?

சமந்தாவின் விவாகரத்தை  பின்தொடர்ந்த சூப்பர் ஸ்டார் சீரஞ்வியின் மகள்!! இரண்டாவது முறையாக விவாகரத்தா...?

தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்து வருவதால், என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். நாகசைதன்யா - சமந்தா, இசையமைப்பாளர் இமான் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தனுஷும் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தெலுங்கில் சூப்பர் ஸ்டாரான  நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தனது கணவர் பெயரை திடீரென நீக்கியதால், அவரும்  தனது கணவரை பிரியப்போகிறார் என்ற தகவல் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு சுஷ்மிதா என்ற மூத்த மகளும் ஸ்ரீஜா என்ற இளைய மகளும்,  ராம் சரண் என்ற மகனும் உள்ளனர். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, ஏற்கனவே சிரிஷ் பரத்வாஜ் என்பவருடன் விவாகரத்து ஆன நிலையில், தெலுங்கு நடிகர் கல்யாண் ராவ் என்பவரை ஸ்ரீஜா கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நவிஷ்கா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் திடீரென ஸ்ரீஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியான ஸ்ரீஜா கல்யாண் என்பதில் இருந்து கல்யாணை நீக்கிவிட்டு தனது அப்பா சிரஞ்சீவியின் குடும்பப் பெயரான கொனிடேலா என்பதை சேர்த்துள்ளார். இதனால் ஸ்ரீஜா தனது கணவரைப் பிரியப்போகிறார் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

முன்னதாக நடிகை சமந்தாவும் இதேபோன்று  தனது கணவர் நாகசைதன்யாவை பிரிவதற்கு முன்பே தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கியிருந்தார். இதையடுத்து ஒருசில வாரங்களில் அவர்களது விவாகரத்து குறித்த தகவல் வெளியானது. தற்போது இதே வழிமுறையை பின்பற்றி சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜாவும் தனது கணவரை விவாகரத்துச் செய்யப்போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத் தகவலை இதுவரை சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து யாரும் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram

A post shared by Sreeja (@sreejakonidela)