கொரோனாவால் பிரபல நடிகையின் மகன், கணவர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம் 

கொரோனாவால் பிரபல நடிகையின் மகன், கணவர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம் 

நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
Published on

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோரதாண்டவம் ஆடிவருகிறது. பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தொற்று, பொதுமக்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. 

கொரோனாவின் 2வது அலையில் பல திரை பிரபலங்கள் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு உள்ளனர், சில கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றுக்கு மகனை இழந்தார் பிரபல நடிகை கவிதா. அதோடு அவரது கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com