புஷ்பா படத்திற்கு இத்தனை விருதுகளா....?

புஷ்பா படத்திற்கு இத்தனை விருதுகளா....?

டோலிவுட்டில் பிரபல நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் பல பிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.  


2021ம் ஆண்டு, ஒடிடி தளத்தில் வெளியானாலும், உலக அளவில் ரசிகர் கூட்டத்தைப் பெற்றதோடு, மாபெரும் வசூல் வேட்டை ஆடியது. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், அஜய் கோஷ், ஜெகதீஷ் பிரதாப், மைம் கோபி, ஷத்ரு, தனஞ்செய், ஹரிஷ் உத்தமன், சுனில் உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆக இருக்க, அதில் இடம்பெற்ற 'ஓ சொல்றீயா மாமா' என்ற பாடல் உலக அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படம், ஓடிடி தளத்தில் வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில், புஷ்பா என்ற முற்றிலும் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுன், ரசிகர்கள் கவனத்தை எவ்வளவு ஈர்த்தாரோ, அந்த அளவுக்கு, ஏன், அதனையும் விட அதிகமான கவனத்தை ஈர்த்தது வில்லன் கதாபாத்திரமான ஃபகத் ஃபாசில் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்நிலையில், தற்போது  67 - வது தென்னிந்திய பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தெலுங்கில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் 7 விருதுகளை தட்டி சென்றுள்ளது. அந்த வகையில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பாடகர், சிறந்த பாடகி என மொத்தம் 7 விருதுகளை பெற்றுள்ளது.