விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம்..!!

டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படமான எஸ்.கே.20 யின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம்..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் உருவான டான் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் எஸ்.கே.20. இப்படத்துக்கான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தெலுங்கு, ஜாதி ரத்னாலு படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்கி வருகையில், உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்துக்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழு. ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் அப்டேட் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.