சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் ஓடிடி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. எனவே ”டாக்டர்” திரைப்படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டாக்டர் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்தனர்.
கொரோனா காரணமாக படம் ரிலீஸாகும் தேதி தள்ளி போய்கொண்டே இருகிறது. பின்னர் மே 13-ம் தேதி ரம்ஜான் தினத்தில் படம் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. பின்னர் டாக்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது வருகிறது.
#Doctor the @Siva_Kartikeyan entertainer to premiere directly on #OTT via @DisneyplusHSVIP pic.twitter.com/KYedaQqc82
— Sreedhar Pillai (@sri50) June 29, 2021