பாடகர் பூபன் ஹசாரிகாவின் 96வது பிறந்தநாள்...! டூடுல் வெளியிட்ட கூகுள்...!

மறைந்த பிரபல பாடகர் பூபன் ஹசாரிகாவின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு டூடுல் வெளியிட்டு கூகுள் கொண்டாடியுள்ளது

பாடகர் பூபன் ஹசாரிகாவின் 96வது பிறந்தநாள்...!  டூடுல் வெளியிட்ட கூகுள்...!

மறைந்த இந்திய பின்னணி பாடகரான பூபன் ஹசாரிகா 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர். அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சுதாகந்தா என்றே பலராலும் அறியப்பட்டார். அதோடு இசைக்கலைஞர், கவிஞர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டிருந்த அவர், பெரும்பாலும் அசாமி மொழி பாடல்களையே பாடியுள்ளார்.  

இவர் அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற இசையை தேசிய அளவில் ஹிந்தி சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். மக்களின் கதையை, மகிழ்வை, துக்கத்தை, தைரியத்தை, காதலை, தனிமையை தனக்கே உரிய பாணியிலான நாட்டுப்புற பாடல்கள் மூலம் அவர் பாடி புகழ்பெற்றார். மேலும் இவர் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 

இந்நிலையில் இணையத்தின் பிரபலமான மற்றும் முக்கிய தேடுதல் செயலியான கூகுள், தனது டூடுல் முகப்பில் சுதாகந்தா என்ற பூபன் ஹசாரிக்காவின் 96 வது பிறந்தநாளில் அவரை நினைவுகூறும் வகையில், சித்திரம் மூலம் டூடுல் வெளியிட்டு கூகுள் கொண்டாடியுள்ளது.