பிக் பாசில் பாலாஜியிடம் கொந்தளித்த சிம்பு! என் ரசிகனா இருந்தா நீ இப்படி பண்ணிருக்க மாட்ட...

பிக் பாசில் பாலாஜியிடம் கொந்தளித்த சிம்பு! என் ரசிகனா இருந்தா நீ இப்படி பண்ணிருக்க மாட்ட...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தக்கட்டமாக தான் பிக்பாஸ் அல்டிமேட் ஷோ ஆரம்பமானது. அந்த ஷோவை சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த எபிசோட்டில் பேசிய சிம்பு, கடந்த வாரம் நடந்த டாஸ்கில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை என சொல்லி போட்டியாளர்களை கண்டித்து வந்தார்.

அதில் சிம்பு ரசிகர் என சொல்லிக்கொண்ட பாலாஜி விஷயத்திற்காக பாராட்டிய சிம்பு மற்றொரு விஷயத்திற்காக திட்டினார். என் ரசிகன் என சொல்லி மற்றவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தது எனக்கு பிடித்திருந்தது என பாலாஜியை பாராட்டிய சிம்பு, அதேசமயம் "எஸ்டிஆர் ஃபேன் ஆக இருந்தால் பிராதுக்கு பயப்பட கூடாது. நாம எவ்ளோ தாண்டி வந்திருக்கோம். அதையும் நாம் அப்படி தானே எடுத்துக்கணும்" என பாலாஜி முருகதாஸை கண்டித்தார் சிம்பு.