பழைய காதலியுடன் செம்ம நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் சிம்பு... சும்மா அள்ளுதே!

பழைய காதலியுடன் செம்ம நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் சிம்பு... சும்மா அள்ளுதே!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி கடைசியாக தமிழில் 100 திரைப் படத்தில் நடித்திருந்த ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தனது 50-வது திரைப்படமான மஹாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளார் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள மஹா திரைப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்க இப்பொழுது ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது


 இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷலாக தயாராகிவருகிறது. இதுவரை ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்த ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கியுள்ளார். மஹா ஹன்சிகா மோத்வானி 50வது திரைப்படம் என்பதால் படக்குழு பார்த்து பார்த்து இப்படத்தை உருவாக்கி வருகிறது.

 மஹா பட போஸ்டர் வெளியானது முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு இருக்க மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். வாலு படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட குறுகிய காலத்திலேயே இருவரும் காதலை முறித்துக் கொண்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் இதனால் நீண்ட வருடங்களாக இணைந்து நடிக்காமல் இருந்த ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு மீண்டும் மஹா திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மஹா டீசர் ஏற்கனவே ஏற்கனவே வெளியாகி பெரும் நல்ல வரவேற்பு பெற்றது. டீசலில் இருந்து இந்த திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம் என தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் மஹா படக்குழு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.