கேரள திரையுலகிலும் கெத்து காட்டும் சிம்பு... மாநாட்டை மானாவாரியா புகழ்ந்த மலையாள பிரபலம்; நெகிழ்ச்சியில் படக்குழு!!

மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் மோகன்லால், சிம்புவின் மாநாடு திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

கேரள திரையுலகிலும் கெத்து காட்டும் சிம்பு... மாநாட்டை மானாவாரியா புகழ்ந்த மலையாள பிரபலம்; நெகிழ்ச்சியில் படக்குழு!!

மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் மோகன்லால். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படமான 'மரக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' மலையாளம், தமிழ் மற்றும் பல மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது. 

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் பிரியதர்சனுடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மோகன்லால், மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு, அப்படத்தின் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த  தனது நெருங்கிய நண்பரான இயக்குனர் பிரியதர்சனின் மகள் கல்யாணி பிரியதர்சனுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மாநாடு திரைப்படம் குறித்த மோகன்லாலின் பேட்டி சிம்பு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மோகன்லாலின் மரக்காயர் திரைப்படத்திற்கு சிம்பு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு கிடைத்துள்ளது. மாநாடு திரைப்படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்சன் மரக்காயர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது. 

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் மாநாடு திரைப்படம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது. அதன்காரணமாக வெளியான முதல் வாரத்திலேயே மாநாடு திரைப்படம் ஐம்பது கோடி பாக்ஸ் ஆபிசில் இணைந்ததாக திரையுலகினர் கூறிவருகின்றனர்.