குக் வித் கோமாளி மணிமேகலை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்..

தனியார் குக் வித் கோமாளி (CWC) நிகழ்ச்சியில் இருந்து புகழ்பெற்ற மணிமேகலை விலகுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

குக் வித் கோமாளி மணிமேகலை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்..

மணிமேகலை  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருக்க கூடிய நபர்.  குக் வித் கோமாளி என்கின்ற சமையல் நிகழ்ச்சியின் மூலமாக வாரம் ஒருமுறை தோன்றி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளர்களில் ஒருவரான இவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக பதிவிட்டிருந்தார்.

cook with comali 2, ஷகிலா மடியில் படுத்து தூஞ்கிய மணிமேகலை! - குக் வித்  கோமாளி செட் வீடியோ - manimegalai sleeping in cook with comali set: see  video - Samayam Tamil

கடைசி நிகழ்ச்சி 

 அதில் இதுதான் என்னுடைய குக் வித் கோமாளியின் கடைசி நிகழ்ச்சி அதுமட்டுமின்றி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,''இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவளாக  இருப்பேன்.

Manimegalai: 'குக் வித் கோமாளி' மணிமேகலை வீட்டில் விலையுயர்ந்த பொருள்  திருட்டு...! போலீசார் விசாரணை..!

எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் விலகுவதற்கான காரணத்தை மணிமேகலை அறிவிக்கவில்லை.

Cook with Comali Manimegalai Make up Tricks and Tips Tamil News ஜெல் லைனர்,  நியூட் லிப்ஸ்டிக்.. - 'குக் வித் கோமாளி' மணிமேகலையின் மேக்-அப் டிப்ஸ்! |  Indian Express Tamil

மேலும் படிக்க | வேலூர் முள்ளு கத்திரிக்காய் இராமநாதபுரம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே ஆர்வம் சற்று குறைவாகவே இருக்கிறது. காரணம் கடந்த சீசன்களைக் காட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் ரசிகர்களை பெரிதும் கரவில்லை என்று கூறப்படுகிறது. முதல் எலிமினேஷனில் நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் வெளியேற இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது வெளியான புதிய புரமோவில் விஜே விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் ஃபேஷ் ஆஃப் குக்கிங்கிற்கு செல்வதாக காட்டப்படுகிறது

மேலும் படிக்க | மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்