சோசியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த முதல் நாளே மாஸ் காட்டிய ஷிவானி!

நடிகை ஷிவானி நாராயணன் ட்விட்டரில் கணக்கு தொடங்கிய முதல் நாளே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார். 

சோசியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த முதல் நாளே மாஸ் காட்டிய ஷிவானி!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியலில் நடித்து பிரபலமானவர். ஷிவானிக்கு அதிக ரசிகர்கள் உருவாகக் காரணமே அவரது போட்டோஷூட்கள் தான். ஷிவானி கிளாமர் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவரின் போட்டோஷூட்களைப் பார்த்தே இளைஞர்கள் அவரது ரசிகர்களாக மாறிவிட்டனர். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் இன்னும் ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தற்போது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குத் தொடங்கியுள்ளார். அவர் ட்விட்டரில் நுழைந்த முதல் நாளே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துவிட்டார். ஷிவானிக்கு இவ்வளவு மவுசா என்று பலர் ஆச்சர்யபட்டு வருகின்றனர். சீரியலில் கலக்கி வரும் ஷிவானி விரைவில் சினிமா பக்கமும் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.