அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்... ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் 

அட்லீ இயக்கத்தில் புதிதாக உருவாக உள்ள படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்... ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் 

பிரமாண்டத்துக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீயின்  இயக்கத்தில் வெளியான ராஜாராணி,மற்றும் விஜய் நடிப்பில் வெளியான தெறி ,மெர்சல், பிகில் என 4 படங்களுமே அவருக்கு 'பிளாக் பஸ்டர்'படங்களாகவே அமைந்தது. 

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது. ஷாருக்கான் தற்போது 'பதான்' திரைப்படத்தில் தீபிகா படுகோனுடன் ஜோடி சேர்ந்து  நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் அட்லீ இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.மேலும் தற்போது அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க அட்லீ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி  வருவதாகவும்  கூறப்படுகிறது.