ஷாருக்கான் தான் முக்கியமாம்..அல்லுக்கு ஷாக்..புஷ்பா 2-ல் இருந்து விலக என்ன காரணம்?

பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி..!

ஷாருக்கான் தான் முக்கியமாம்..அல்லுக்கு ஷாக்..புஷ்பா 2-ல் இருந்து விலக என்ன காரணம்?

புஷ்பா: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. தமிழ், தெலுங்கு, மலையாள, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது இப்படம். தெலுங்கு மொழியை தவிர்த்து பிற மொழிகளில் ஓரளவு வெற்றி பெற்றது புஷ்பா. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது. 

புஷ்பா 2: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழு தயாராகினர். சுகுமார் இயக்கத்தில், சீனா, தாய்லாந்து என நாடு நாடாக சென்று படக்குழுவினர் பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த பாகத்தில் தனது சாம்ராஜ்யத்தை எப்படி புஷ்பா விரிவுபடுத்தினார்? என்பது தான் மையக்கதை எனக் கூறப்படுகிறது. 

வில்லன் விஜய்சேதுபதி: நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவைக் காட்டிலும் வில்லன் கதாபாத்திரங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறார். 'விக்ரம் வேதா' தொடங்கி, சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வரையிலும் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாய் நடித்து அசரடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

பிறமொழிகளிலும் வில்லன்: தமிழ் மட்டுமின்றி ஒரு பான் இந்தியா வில்லனாக மாறியிருக்கிறார் விஜய்சேதுபதி. பாலிவுட்டில் தொடங்கி டோலிவுட் வரை அவர் வில்லனாக நடித்தால் தான் நன்றாக இருக்கும் என போட்டி போட்டு அவரது கால்ஷீட்களை புக் செய்து வருகின்றனர். சம்பளம் டபுள் மடங்கு ஏறினாலும் அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் காத்துகிடக்கின்றனர். 

புஷ்பா2-க்கு நோ: இந்த நிலையில், அல்லு அர்ஜூனின் புஷ்பா 2- படத்தில் முதலாவதாக விஜய்சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் புஷ்பா 2- படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. 

ஷாருக்கானுக்கு யெஸ்: புஷ்பா 2-படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அசைப் போட்ட நேரத்தில், ஏற்கனவே ஹிந்தியில் ஷாருக்கானின் "ஜவான்" படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பதால், புஷ்பா 2- படத்திற்கு அதே நேரத்தில் கால் ஷீட் கொடுக்க முடியாததால் அப்படத்திலிருந்து விலகியுள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.