குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு.. ஸ்லீவ்லெஸில் புகைப்படம் வெளியிட்ட சாயிஷா

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு.. ஸ்லீவ்லெஸில் புகைப்படம் வெளியிட்ட சாயிஷா

பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

சாயிஷா வந்த நேரமோ என்னமோ தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ஆர்யா இப்பொழுது தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

அதுவும் திருமணத்திற்குப் பிறகு வெளியான மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. 

ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது நண்பரும் நலம் விரும்பியான நடிகர் விஷால் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்த சாயிசா குழந்தை பெற்ற பிறகு நீண்ட நாள் கழித்து வெளியிட்டுள்ள புகைப்படம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.