சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

பா.ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

பா.ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை.

குத்துசண்டையை மையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 22ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாத நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சார்பட்டா பரம்பரையின் டிரெய்லர், யூடியூப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.