தீபாவளிக்குக் காத்திருக்கும் சரவெடி படங்கள் ரெடி; ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படங்களின் பட்டியல் !!

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன் அனைவரது படங்களும் வெளியாக இருப்பதால், தியேட்டர்கள் தெரிக்கவிட இருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

தீபாவளிக்குக் காத்திருக்கும் சரவெடி படங்கள் ரெடி; ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படங்களின் பட்டியல் !!

தீபாவளி என்றாலே சரவெடிகளும் இனிப்புகளும் நினைவிற்கு வருகிறதோ இல்லையோ, கண்டிப்பாக புதிய படங்கள், சினிமா ரசிகர்களின் நினைவுக்கு வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தடுப்புகள் காரணமாக தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. அதையும் தாண்டி, எண்டெர்டெயின்மெண்ட் என இருந்த தியேட்டர்கள் அனைத்தும் மூடியபடியாக இருந்தன. இந்த ரசிகர்களின் தளர்ந்த மனங்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு, கடந்த ஜனவரி முதல் 100 சதவீத ஆக்கிரமிப்புடன் படங்கள் தியேட்டர்களில் வெளியாகத் துவங்கி விட்டது.

அந்த வகையில், தமிழ் படங்களில் முதலாக, அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட அஜித் குமாரின் வலிமை படம் வெளியானது. போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கிய வலிமை படம், 3 வருட காத்திருப்பிற்கு பிறகு தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களுக்கு பரிசாக இருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு, கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் இணையும் இந்த கூட்டணி, ஏகே 61 ஆக உருவாகி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக, ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம், வருகிற தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க போகிறது.

அஜித் என்றாலே, அங்கு விஜய் பற்றி பேச்சு இல்லாமல் இருக்குமா? அவரது படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம், தோழா பட இயக்குனர் வம்சி பைடிபல்லியின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. Dil Raju மற்றும் Shirish ஆகியோர் இணைந்து, Sri Venkateswara Creations தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து வரும் இந்த தலைப்பு வெளியாகாத தளபதி 66 படத்தில், ராஷ்மிகா, சரத் குமார் உள்ளிட்ட பல பெரும் நடிகர்களும் நடித்து வருகின்றனர். விஜயின் முந்தைய படமான பீஸ்ட் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வந்ததால், இவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து வருகின்றனர்.

அஜித் விஜய்க்கு அடுத்ததாக, கார்த்தி நடிப்பில் சர்தார் படமும் தீபாவளியின் சரவெடி வரிசையில் இணைந்துள்ளது. தனித்தன்மையான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் கார்த்தியின் அடுத்த வித்தியாசமான படம் தான் சர்தார். பி எஸ் மித்ரன் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களிலும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். இது மட்டுமின்றி, மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படமும் இந்த வருடம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, நமது கமர்சியல் ஹீரோ சிவகார்த்திகேயன். பல சர்ச்சகளைக் கிளப்பிய இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். காமெடி மற்றும் ஃபாண்டசி கதைக்களம் கொண்ட இந்த படமும் தீபாவளி அன்று திரைகளைத் தெரிக்க விடப் போகிறது. அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த படம், இந்த வருட தீபாவளிக்கே எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது அதுவும், கொரோனா கட்டுபாடுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் தமிழ் படங்கள் இவை தான் என்பதால், ரசிகர்கள் வெகு குஷியாக இருக்கின்றனர். வெயிட்டிங்கிலேயே வெறியாகி வரும் ரசிகர்களுக்கு, இந்த தீபாவளி மாபெரும் ட்ரீட்டாகவே அமையப்போகிறது.