வெப் சீரிஸின் களமிறங்கும் எஸ்ஜே சூர்யா...!!

எஸ்ஜே சூர்யா புதிய வெப் சீரிஸின் மூலமாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப் சீரிஸின் களமிறங்கும் எஸ்ஜே சூர்யா...!!

தமிழ்திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஒருவர் எஸ்ஜே சூர்யா. இயக்கம், எழுத்தும் நடிப்பு, இசை என எல்லாத் துறைகளிலும் திறமை கொண்டவராக திகழ்பவர் எஸ்ஜே சூர்யா. ‘வாலி’படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தார். பின்னர் நடிகராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.

மெர்சல்' படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்திலும் எஸ்ஜே சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் புதிய வெப் சீரீஸ் மூலமாக அவர் ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலைகாரன்' படத்தின் இயக்குனர் ஆன்ட்ரூ லூயிஸ் இந்த வெப் சீரிஸை இயக்க இருப்பதாகவும் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஒரிஜினலாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது