“ரன் லால் ரன்” வைரலாகும் - நடிகர் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் ட்ரைலர்..!

அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 

“ரன் லால் ரன்” வைரலாகும் - நடிகர் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் ட்ரைலர்..!

ஹாலிவுட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டின் பொழுது வெளியான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம் சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.அமெரிக்க வரலாற்றில் நடந்திருந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையிலும் கற்பனைகள் கலந்த திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.அதில் டாம் ஹாங்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அத்திரைப்படத்தை தழுவி தான் பாலிவுட்டில் தற்போது லால் சிங் சத்தா என உருவாகி உள்ளது.

இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் தான் தற்போது இந்தி நடிகர் அமீர்கான் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் கரீனா கபூர் மற்றும் நாகசைதான்யா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர் ஷாருக்கானும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லால் சிங் சத்தா திரைப்படத்தின் ட்ரைலரானது நேற்று நடைபெற்று கொண்டிருந்த ஐ.பி.எல் இறுதிப் போட்டியின் போது இடைவேளை சமயத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. மேலும் சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ட்ரைலர் வைரலாக்கப்பட்டு வருகிறது.