திருமண இடத்தை மாற்றிய காதல் ஜோடிகள்...ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்கும் நயன் (ம) விக்கி...!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.

திருமண இடத்தை மாற்றிய காதல் ஜோடிகள்...ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்கும் நயன் (ம) விக்கி...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகர் நயன், மற்றும் பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமைகளை வைத்திருக்கும் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருட காலமாக காதலித்து வருகின்றனர்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் காதல் ஜோடிகள் ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இதனை கண்ட ரசிகர்கள் எப்போது திருமணம் , எப்போது தான் திருமணம் என கேட்டு வர ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்களை சமீபத்தில் வெளியிட்டனர். 

ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இருவரும் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது இடத்தை மாற்றி வைத்துள்ளனர். 

திருப்பதியில் 150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் திருமண இடத்தை மாற்றியதாக கூறியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள மஹாபலிபுரத்தில் அமைந்திருக்கும்  ரெசார்ட் ஒன்றில் ஜூன் 9 ஆம் தேதி திட்டமிட்டபடி விமர்சையாக திருமணம் நடைபெறும் எனவும் அழைப்பிதழை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.