தயவு செய்து இதை செய்யாதீர்கள் : ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட ராக்கி சாவந்த் !!

3 வருட திருமணம் முடிந்த நிலையில், தனது முன்னாள் கணவரின் பெயரைத் தனது உடலில் இருந்து விலக்கியுள்ளார் ராக்கி. இது குறித்த வீடியோவில் அவர் அளித்த அறிவுறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தயவு செய்து இதை செய்யாதீர்கள் : ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட ராக்கி சாவந்த் !!

சர்ச்சைகளின் ராணி என்றால் நினைவுக்கு வருவது பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தான். எந்த தலைப்பு எடுத்தாலும், அது குறித்த சர்ச்சைகளில் அவரது பெயர் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக காதலர்கள் மற்றும் கணவன்கள் குறித்த சர்ச்சைதான் இவருக்கு அதிகம் என்றே சொல்லலாம். பல முன்னாள் காதலர்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் கொண்ட ராக்கி, சமீபத்தில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கூட, தனக்கு ரொம்ப நாள் கழித்து நிம்மதியான வாழ்க்கைக் கிடைத்துள்ளது என்று கூட ஒரு முறை பேசியது பதிவாகி இருந்தது.

ஆனால், தற்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக ராக்கி தெரிவித்திருந்த நிலையில், பெரும் சர்ச்சைக் கிளம்பியது. 3 ஆண்டுகளாக தொடர்ந்த இவரது திருமணம், தற்போது முடிந்ததைக் குறித்து, தனது சோசியல் மிடியா தளங்களில் ராக்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது முன்னாள் கணவரை, தனது மனதில் இருந்தும் உடலில் இருந்தும் நீக்கியதாக ஒரு வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதோடு ஒரு அறிவுரையும் கூறிய ராக்கியின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது முன்னாள் கணவரான ரித்தேஷ் பெயரை, தனது இடுப்புக்கு மேல், வலது பக்கம் பச்சைக் குத்தி இருந்தார் ராக்கி. இந்த டாட்டூவை நீக்கிய போது அதனை ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனது ஃபாலோயர்களுக்கு ஒரு அறிவுரை கொடுத்திருந்தார். அதில், “இன்று நான் கடைசியாக எனது ரிதேஷ் என்ற டாட்டூவை நீக்கப் போகிறேன்.” என்று தொடங்கி, வலி தாங்க முடியாமல், தனது டாட்டூவை நீக்கினார் அவர். பின் தொடர்ந்து பேசிய அவர், “3 ஆண்டு திருமணம். ரித்தேஷ், நீ நிரந்தரமாக எனது வாழ்க்கையில் இருந்து இந்த டாட்டூ மூலமாக வெளியேறி விட்டாய். இதனால் தான் வாழ்க்கையில் யாரும் காதலில் பித்துப் பிடித்து, துணைவரின் பெயரை இது போல பச்சைக் குத்திக் கொள்ள கூடாது. பின், அவர்களையும், அவர்களது பெயர் கொண்ட டாட்டூவையும் நீக்குவது மிகவும் கடினமாகி விடும்.” என்று தனது ஃபாலோயர்களுக்கு அறிவுரை கொடுத்திருந்தார்.

4 மில்லியன்களுக்கும் மேலான ஃபாலோயர்கள் கொண்ட இவர் வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இதற்கு பல ஆயிரம் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும்,பலரும் அவரது கருத்தை ஒப்புக் கொள்ளும் படியாக, யாரும் இது போன்ற பைத்தியக்காரத்தனத்தை செய்யாதீர்கள், தந்தை தாய் உடன் பிறந்தவர்கள் தவிற வேறு யார் பெயரையும் டாட்டூவாக போட்டுக் கொள்ளாதீர்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.