ஜீ பும்பா, விடாது கருப்பு தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ் நினைவிருக்கா? தற்கொலை செய்து கொண்டாராம்..!

விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!

ஜீ பும்பா, விடாது கருப்பு தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ் நினைவிருக்கா? தற்கொலை செய்து கொண்டாராம்..!

90ஸ் கிட்ஸ்களின் தொலைக்காட்சி தொடர்கள்:

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சி தொடர்களாக இருந்தது மர்ம தேசம், ஜீ பூம்பா, விடாது கருப்பு போன்ற தொடர்கள். வார நாட்களில் மாலை ஒளிபரப்பப்படும் இந்த தொடர்களை சிறுவர்கள் ஆர்வமுடன் கண்டு களிப்பர். 

குழந்தை நட்சத்திரம் லோகேஷ்:

அப்படி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் குழந்தையாக நடித்து ரசிகர்களை பெற்றவர் லோகேஷ். தற்போது அவர் இளைஞர் ஆகி விட்டார். தொலைக்காட்சி தொடர்களை தாண்டி நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுப்பட போகுதய்யா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் லோகேஷ். 

தற்கொலை:

அத்தியாயம் என்ற குறும்படத்தை இயக்கியிருந்த லோகேஷ், திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் இருந்துள்ளார். இந்த நிலையில், லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஷமருந்தி தற்கொலை முயற்சி:

விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் இயக்குநர், தயாரிப்பாளருடன் லோகேஷ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.