"அனைவரும் ஒன்று என்பதை நினைவில் கொள்க" நடிகர் ஆதி கருத்து!

எல்லைகளை வரையறுக்கவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதை தவிர்த்து. நாம் அனைவரும் ஒன்று என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் ஆதி பேட்டியளித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பில் பொதுமக்களிடையே இதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக இதய தினத்தை  முன்னிட்டு 300 பேர் இணைந்து இதய வடிவ மனித சங்கிலி அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு பொதுமக்களிடையே இதயம் குறித்து கலைந்துரையாடினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆதி, உலக இதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார். 

எல்லோரும் சாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவற்றிற்காக, வாழ்க்கையில் அதிகமாக மன அழுதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்

மேலும், கர்நாடகாவில் நடிகர் சித்தார்த் செய்தியாளர் சந்திப்பின்போது அவமதிக்க பட்டது குறித்த கேள்விக்கு,  நாம் எல்லோரும் ஒன்று தான் என்பதை எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எதற்காக தமிழ் நாடு, கர்நாடகம் என்று பார்டர் பிறிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான் என்று தெரிவித்தார். நம் நாட்டை நேசிப்பது மட்டுமில்லாமல், நம்மை நேசிப்பவர்களையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!