நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான : விருமனின் கஞ்சா பூவு கண்ணால!! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியின் பிறந்தநாளான இன்று அவர் தற்போது நடித்திருக்கும் விருமன் படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். 

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான : விருமனின் கஞ்சா பூவு கண்ணால!! 

யுவனின் இசையில் வெளியான இப்பாடல், தற்போது வரை லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியும் பாடலுக்கு கருத்து தெருவித்தும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

இதன் இடையில் நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளான இன்று தனது தந்தை சிவக்குமாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

அதன் வரிசையில் இன்று பழனி மலைக்கோவிலில் அவருடைய தந்தையுடன் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். வின்ச் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று விஸ்வரூப தரிசனத்துக்கு பின் வழிபாடு நடத்தினர்.

அவர்களை கண்ட பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் நடிகர் கார்த்தியுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை அடுத்து மின் இழுவை இரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்த இருவரும் கார்மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.