கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்... புதிய தேதி அறிவிப்பு!

கீா்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின் அறிவிப்பு தேதியை படக்குழுவினா் அறிவித்துள்ளனா்.

கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்... புதிய தேதி அறிவிப்பு!

கீா்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின் அறிவிப்பு தேதியை படக்குழுவினா் அறிவித்துள்ளனா்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரிபாட்டா’, குட்லக் சகி படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் குட்லக் சகி படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழுவினா் அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தினை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். ஜகபதி பாபு, ஆதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டை உறுதி செய்துள்ளனர். இப்படம் வருகிற 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.