ராதே ஷியாம் படத்தால் தற்கொலை செய்துக்கொண்ட ரசிகர்! காரணம் கேட்டு அதிர்ச்சியான படக்குழு!!

ராதே ஷியாம் படத்திற்கு நல்ல வரவேற்பு இல்லை என்பதால் மனமுடைந்த ரசிகர் ரவி தேஜா தற்கொலை...

ராதே ஷியாம் படத்தால் தற்கொலை செய்துக்கொண்ட ரசிகர்! காரணம் கேட்டு அதிர்ச்சியான படக்குழு!!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவராவார். அதுமட்டுமின்றி பான் இந்தியா அளவில் இன்று தனது மார்கெட்டை விரிவு படுத்தி வைத்துள்ள உச்ச நட்சத்திரம் தான் நடிகர் பிரபாஸ். பாகுபலியை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே பான் இந்தியா அளவில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. 

அதன்படி இவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியான ராதே ஷ்யாம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் ஏமாற்றம் அடைந்து தான் மிச்சம் என புலம்பி தள்ளும் நிலைக்கு இப்படம் தள்ளப்பட்டுள்ளது. 

இப்படம் திரைக்கு வந்த நான்கு நாட்களிலேயே மிக மோசமான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு மட்டுமின்றி வெளியான அனைத்து மொழிகளிலுமே மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அதோடு படத்தின் வசூலும் சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஆந்திர பிரதேசம் குன்னூரை சேர்ந்த ரவி தேஜா என்பவர் நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகராம்.  சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் படத்திற்கு நல்ல வரவேற்பு இல்லை என்பதால் மனமுடைந்த ரசிகர் ரவி தேஜா தற்கொலை செய்துகொண்டுள்ளார். நான் இதனால் தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என தனது அம்மாவிடமே அவர் வாக்குமூலம் கூறியிருக்கிறார்.

இப்படி ரசிகர் ஒருவர் படம் ஓடவில்லை என்பதற்காக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து அறிந்த ராதே ஷியாம் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.