தென்னிந்திய சினிமாவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நடிகை என்ற பட்டியலில் இருந்த காஜல் அகர்வால், ஆலியா பட், சமந்தா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் 1.92கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். காஜல் அகர்வாலை 1.90கோடி பேரும், சமந்தாவை 1.75 கோடி பேரும், ஆலியா பட்டை 1.72கோடி பேரும் பின் தொடர்கின்றனர்.