மீண்டும் நடிப்பில் களம் இறங்கும் ராம ராஜன்!

பல வருடங்கள் கழித்து சினிமாவில் காலெடுத்து வைக்கிறார், “நம்ம ஊரு பாட்டுக்காரன்” ராமராஜன்.

மீண்டும் நடிப்பில் களம் இறங்கும் ராம ராஜன்!

தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராமராஜன். சண்டைக் காட்சிகள் என்றாலே, ராமராஜனின் சித்தியாசமான சண்டைக் காட்சிகள் தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட சிறந்த நடிகர் தான் ராமராஜன். அவரது படங்கள் குடும்ப பாங்கான கதைகளாக இருப்பதைத் தாண்டி, அவரது படங்களின் பாடல்களுக்கே தனி ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வந்தால் ஹீரோவாகத் தான் வருவேன் என சொல்லிக் கொண்டிருந்த ராமராஜன், பல வருடங்களாக, சினிமா துறையில் எட்டிப் பார்க்காமலேயே இருந்தார். அவரது காலக்கட்டத்தில் வந்த நாயகனான ‘மைக்’ மோகன் கூட, தற்போது அப்பா போன்ற கதாபாத்திரங்கள் நடிக்கத் துவங்கிய நிலையில், அவர் இன்னுமும் ஹீரோவாக முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

61 வயதான ராமராஜன், தற்போது, எக்ஸ்ட்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், தற்போது மீண்டும் tஹிரையுலகை ஆட்டி வைக்க வருகிறார். ராம ராஜனுடன் ராதாரவி , எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ராகேஷ் இயக்க இருக்கும் இந்த படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில்  வெளியாக ஒஇருப்பது குறிப்பிடத்தக்கது.