வரும் 19ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

தனது உடல் பரிசோதனைக்காக ஜூன் 19 ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

வரும் 19ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அரசியல் வரவில்லை என கூறினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக ஜூன் 19 ஆம் தேதி இரவு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  

அமெரிக்காவுக்கு செல்லும் ரஜினி 3 மாதம் அங்கு தங்கியிருந்து ஓய்வெடுக்கவுள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து தனி விமானத்தில் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினிகாந்த்.