தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்...!!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக உறுதியாகியுள்ளது. 

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்...!!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலே அசத்தலான வெற்றிப் படத்தைக் கொடுத்து கோலிவுட் வட்டாரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார். எனவே அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் அதிகமாகி உள்ளது.

மேலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டினார். மேலும் தனக்காக ஒரு கதை எழுதுமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதிலிருந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. கோலிவுட்டின் பிரபல  தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனராம்.