"லியோ மிக பெரிய வெற்றி அடையனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்" ரஜினி வாழ்த்து!

லியோ திரைப்படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை நடித்து வருகிறார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை செல்வதற்காக இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார் ரஜினிகாந்த்.

அப்போது அங்கு செய்தித்தாளர்களை சந்தித்து ரஜினிகாந்த கூறுகையில், "புவனா ஒரு கேள்வி குறி" திரைப்படத்திற்கு பின் 40 ஆண்டு காலம் கழித்து தற்போது சூட்டிங்-காக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், தென் மாவட்ட மக்கள் அன்பான மக்கள், எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "லியோ மிக பெரிய வெற்றி அடையனும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.