ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியீடு தள்ளிவைப்பு..?

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம்  வெளியீடு தள்ளிவைப்பு..?

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.  

இந்த நிலையில் பெருந்தொற்று பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக ஆர்ஆர்ஆர் படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.