தனிமை வெறுப்பாக இருக்கிறது...ரைசா பரபரப்பு டுவிட்!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக  வலம் வரும்  ரைசா, அவ்வப்போது ட்விட்டரில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தனிமை வெறுப்பாக இருக்கிறது...ரைசா பரபரப்பு டுவிட்!

‘பியார் பிரேமா காதல்’, படநாயகி ரைசா வில்சன் தற்போது,'எஃப்.ஐ.ஆர்', 'தி சேஸ்', 'காதலிக்க யாரும் இல்லை', 'ஆலிஸ்', உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்து வருகிறார் .  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக  வலம் வரும்  ரைசா, அவ்வப்போது ட்விட்டரில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் லைவ் வீடியோவில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் காதல் மற்றும் திருமணம் குறித்த கேள்விகளையே பெரும்பாலான ரசிகர்கள் கேட்டதால் வெறுப்பான ரைசா, தனது முதல் காதல் தோல்வியில் முடிந்து விட்டதாகவும்,விரைவில் அடுத்த காதலுக்காக காத்திருப்பதாகவும்  குறிப்பிட்டவர், எல்லோரும் இதே கேள்வியை கேட்கிறீர்கள். 

இந்த லாக்டவுனில் நான் எங்கே சென்று திருமணம் செய்ய ஒருவரை தேடுவேன். இந்த நேரத்தில் திருமணம் செய்ய அனுமதி இல்லை” என வெளிப்படையாக பேசி இருந்தார்.இந்நிலையில்,தற்போது ரைசா தனது  ட்விட்டரில்  "தனிமை எனக்கு வெறுப்பாக இருக்கிறது"  என பதிவிட்டுள்ளார்.வைரலாக பரவி வரும் இவரது டுவிட்டை பார்த்த பலரும்., "நீங்கள் தனிமையில் இருப்பதாக உணர வேண்டாம்  நாங்கள் இருக்கிறோம். என பதிவிட்டு வருகின்றனர்.