பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை கைவிட வேண்டி... பிரபல இந்தி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி!

பான் மசாலா விளம்பரம் குறித்து பிரபல இந்தி நடிகர்களிடம் மாணவி வைத்த வேண்டுகோள்..!

பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை  கைவிட வேண்டி... பிரபல இந்தி நடிகர்களுக்கு கடிதம் எழுதிய மாணவி!

பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை கைவிடும்படி பிரபல இந்தி நடிகர்களிடம் மத்திய பிரதேச மாணவி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக  நடிகர் ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்கு தனித்தனியே எழுதிய கடிதத்துடன் 5 ரூபாய்க்கான மணி ஆர்டரையும் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் தாங்கள் பான் மசாலாவை விளம்பரம் செய்வது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், இதுதொடர்பாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டும், எந்த பயனும் இல்லை எனவும், இதனால் உடல்நலம் கேடு அடைவதை தவிர எந்த பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

எனவே இளைஞர்கள் தங்களை பின்பற்றுவதை உணர்ந்து, பான் மசாலாவை விளம்பர படுத்துவதை நிறுத்தும்படி சகோதரர்களுக்கான தினத்தில் மீண்டும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் அதே விளம்பரத்தில் நடித்திருந்த அக்‌ஷய் குமார், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அதை விளம்பரப்படுத்துவதை நிறுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.