'புட்டபொம்மா' பாடலை தூக்கி சாப்பிட வருது 'பீஸ்ட்' பாடல்...! சொன்னதே ஜானி மாஸ்டர் தானாம்...!

'புட்டபொம்மா' பாடலை தூக்கி சாப்பிட வருது 'பீஸ்ட்' பாடல்...! சொன்னதே ஜானி மாஸ்டர் தானாம்...!

தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜீன் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளியான ‘அலா வைகுந்தபுரம்லூ’  மெகா ஹிட் கொடுத்தது. பின்னர் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் இந்த படத்தில் இடம்பெற்ற ’புட்டபொம்மா’ என்ற  பாடல் பட்டி தொட்டிலும் பரவி யூ டியூபில் கிட்டத்தட்ட 72 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்தது எனலாம்.

இந்த நிலையில்  இந்த  பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த ஜானி மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’புட்டபொம்மா' தூக்கி சாப்பிட இரண்டு பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது  கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விஜய் ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாகும்.  

அவர் கூறிய இரண்டு பாடல்களில்  ஒன்று தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும், இன்னொன்று ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜானி மாஸ்டரின் இந்த பேட்டியை அடுத்து ’புட்டபொம்மா’ பாடலுக்கு இணையாக அல்லது அதை தூக்கி சாப்பிடும் வகையில் ’பீஸ்ட்’ படத்தில் ஒரு பாடல் உள்ளது என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு மத்தியில்  இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.